Kavikco Parama Visvalingam

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே

மூத்த தமிழே முத்தமிழே – குமரியில்
மூழ்கி எழுந்த வித்தகியே
பா தமிழே பரவசமே – என்
பாடலினிற்கேற்ற பிரசவமே!

மூச்சாய் பேச்சாய் முழு உலகில்;
காற்றாய் நீயும் வீசுகிறாய் – உன்
வளம்தனை பேச வேண்டுமென்றா
வானெலியாக வலம் வந்தாய்.

ஆனித் திங்களில் அவதரித்த
ஊடகத் தமிழே நீ வாழி
உறைபனி உருகி அருவியென
ஊடறுத்து ஓடுது தமிழாக.
இன்று
புளுதி அழைந்த கைகளெல்லாம்
எழுதி வளர்ந்தார் உன்னாலே – நாளை
விழுதுகள் ஊன்றி விருட்சங்களாக
வியாபித்தெழுவார் உலகினிலே
தாயே தமிழே நீ வாழி!
தலைநிமிர்ந்தோமே உனைப் பாடி!
இது
லண்டன்தமிழ் வானொலியின்
புலம்பெயர் தமிழ் சிறுவர்
எழுத்தாளர் மாதம்

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading