அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

pon.tharma

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம் ,இல.534
தலைப்பு .
கறுப்பாஜி ,சிகப்பாஜி ,வெள்ளாஜி.
——————————————————
கறுப்பாஜி ,சிகப்பாஜி . கரையோர வெள்ளாஜி. (நீ )
காதல் என்றும் உன்மேலே ,கடைசிவரை மறவாதே .
கலர்களுக்குள் பேதமுண்டு ,கடமைகளில் திறமையுண்டு (உன்)
மதங்களுக்குள் பேதமுண்டு ,வெண்ணிலாக்குப் பேதமேது .

அயர்விலாது உழைத்துவிட்டால் ,அடடா அள்ளித் தருவாயே .
வியர்வை அதைச் சிந்த விட்டால் ,வெகுவாய் அள்ளிக் குவிப்பாயே .
புதைந்து (உன்னிடம் )கிடக்கும் புதையல்களைப்,புத்தியைத் தீட்டிப் பெற்றிடனும் .
மறைந்து கிடக்கும் மர்மங்களை ,மக்களுக்கெல்லாம் பகிர்ந்திடணும்

மாசில்லாத கொடையாளி ,மக்களுக்கெல்லாம் தாயே நீ .
ஆசுஅற்ற உணவு தந்து ,மூலிகைகள் பலவும் தந்து –
மக்கள் நலம் காக்கும் நீயே மகராசி .
(நீ)மனம் வைத்தால் ,குடிகள் உயரும் தனி ராசி .

மகாமாரி கண்விழித்தால் ,மலையின் உச்சி எற வைப்பா .(இந்த )
மண்ணுக்குள்ளே பொன்னைக் காட்டி ,அண்டத்தவரை மகிழவைப்பா.
ஆக்கம்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading