Selvi Nithianandan

எப்படி இப்படி மனிதம் (605)

மனித வாழ்வின் ஓட்டமும் நடையும்
முடிவு தெரியா ஆட்டமும் வேகமும்
மனமும் மகிழ்ந்தால் வம்பும் பேச்சும்
மனசு சோர்ந்தால் வலியும் சண்டையும்

சுற்றும் சூழலின் நித்தமும் சத்தம்
சுழரும் முள்ளாய் காட்டும் நித்தம்
சுட்டிக் காட்டும் பலமாய் உத்தம்
சுக்கு நூறாய் உடையும் அத்தம்

மானிடம் புரியாத நிலையும் அன்று
மண்ணிலே தெரியாத கதையும் இன்று
மனிதனின் அடக்கம் மகிழ்வுறல் நன்று
மாண்புற விடை தெரியா புரியாமுடிவே

Nada Mohan
Author: Nada Mohan