Selvi Nithianandan

சலவை

மெய்யான உடம்பு
பொய்யான கலவை
நொய்யென வந்தும்
செய்திடும் கூட்டம்

தன்திசை மாற்ற
தன்பால் ஈர்த்து
பொய்யுரை புகட்டி
புகழாரம் சூட்டி

வலுவினை இழக்க
வழிகளை மாற்றி
வன்மத்தை ஏற்றி
வைப்பாரே சூழ்ச்சி

பணம் பதவியிலே
ஆடிடும் பகடை
குணம் மடிந்து
செய்திடும் சலவை

பணம் பதவியிலே
ஆடிடும் பகடை
குணம் மடிந்து
செய்திடும் சலவை

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan