Selvi Nithianandan

தேனீ (517)
ஆறுகால் கொண்டதொரு பூச்சீனம்
அவனியிலே பலவகையைக் கொண்டதும்
ஏழுவகை தேனீங்கள் பிரபலமானதும்
எப்போதுமே கூட்டமாய் வாழுமாம்

அறுகோண அறைகொண்ட கூடுகட்டி
அவற்றின் உடலில் வெளியேற்றும் மெழுகாலே
தேனை சேகரித்து வாழும் திறமையாம்
ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும்
திறனைக் கொண்டதாம்

இராணித்தேனீ வேலைக்காரத் தேனீ மலைத்தேனீ
கொம்புத்தேனீ அடுக்குத்தேனீ கொசுத்தேனீ
மேற்கு கிழக்குலகத் தேனீ இப்படி பலவகையாம்
மேதினியிலே பலருக்கு இலாபமாம்

நடனம்மூலம் கருத்து பரிமாற்றம் செய்யும்
நிர்க்கதியாய் வெளியேற்றப்பட்டு இறக்கும்
சோம்பேறி என்றும் பெயரும் உண்டு
சுற்றுச் சூழலுக்கு பெரிதும் உதவுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading