தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Selvi Nithianandan

நடிப்பு

உள்ளொன்று வெளியொன்று
உள்பூசல் மறைப்பென்று
உண்மைகூட பொய்யாகி
உருவகித்து நாடகமாடி
உதிரத்து உறவுகள்
உறவாடும் ஜென்மங்கள்
உலகினியே பலநிலையே
உரமாகும் இழிநிலையே

உயிர்போகும் வேளையும்
உணர்வுதனை மதியாது
உடன்பணம் வேணுமென
உறுதியாய் பதில்வரும்
உறுத்தலாய் நடித்தே
உழைப்பும் செலவாகும்

உலகினிலே பலரகமாய்
உருகிவிடும் வேடமாய்
உருட்டும் பிரட்டுமாய்
உச்சக் கட்டமாய்
உணவுக்கும் உடைக்கும்
உதவிக்காய் நடிக்கின்றனரே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading