Selvi Nithianandan

பள்ளிக்காலம் 586
இளமைக் காலம்
இனிமைக் கோலம்
இரண்டும் கலந்த
இணைவுப் பாலம்

ஆசிரியர் வருகை
ஆனந்த ஊட்டம்
ஆடல் பாடல்
அரங்காய் கூட்டம்

பரீட்சை வந்தால்
பலரும் போட்டி
பாங்காய் நாமும்
வைப்போம் பேட்டி

நினைவில் என்றும்
மாறாச் சுவடாம்
நீங்கா நிலையாய்
அகத்தின் பொக்கிஷம்

Nada Mohan
Author: Nada Mohan