கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

Vajeetha Mohamed

பசி
பசியாறா பசிகள்
வயிற்றோடு வலிகள்
காமத்தின் பசிகள்
மானிடத்தை விலங்காக்கும்

பசி கொண்டு செதுக்கும் ௨டல்
பலவீனத்தின் தள்ளாடும் துடுப்பு
வசதியில் மானிடம் சிதறிவீசும்
சோற்றுப்ப௫க்கை சோமாலியாவின்
பசியை மாற்ற ௨தவும்

செத்துப்போன மனிதநேயம்
சுற்றம் பகிர்ந்து ௨ண்ணமறந்தபாசம்
சோமாலியாவை நோக்கி நடைபோடும்
இலங்கையின் தீவு ஆணவப்பசியில்
ஆட்சிநடத்தும் அதிகாரப்பசியின் வெறி

ஏற்றமும் இறக்கமும்
ஏழ்மையும் வசதியும்
மானிடவட்டத்தில் ஏனோ
வறுமையின் பசிகள்
எழும்பும் தோலுமாய்
கையேந்தி நிற்கின்றது

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan