தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
Vajeetha Mohamed
முள்ளிவாய்க்கால்
மீளமுடியாத பதிவு
மீண்டு எழும் நினைவு
ஓய்வில்லா ஒப்பாரி
ஒடுக்குமுறையின் சரமாரி
சொந்தமண்ணின் செல்வங்கள்
செத்துமடிந்த அவலங்கள்
அகலத்திறந்த ஆதிக்கம்
அடிமையாக்கிய ஆணவம்
அடக்குமுறையின் அதிகாரம்
அகத்தைகொண்ட தலைக்கணம்
பிணக்குவியலுக்குள் பெ௫மை
கொண்டியது
பிஞ்சுகளின் கு௫தியில்
மகிழ்ச்சி தாண்டவமாடியது
எம் இனத்தையே அழித்தவலி
சிதைத்த வலிப்புண்களின் வேலி
காயத்தின் தழும்பும் மறைவதில்லை
காலத்தின் நிகழ்வும் நிலைப்பதில்லை
விதியென விரண்டோடி வீழாமல்
மதியுண்டு வீறுகொண்டு துடித்தெழுவோம்
துயர்துடைத்து புதிப்பித்து
முள்ளிவாய்க்கால் முதுகெலும்பாய்
சரித்த எம் இனமே
சரித்திரம் படைத்திடு
நாளை எம்பரம்பரை
நெஞ்சுயர்த்தி நிமர்ந்து
ஈழமதில் வாழவேண்டாமா
நாம் ஏன் ஓடி ஒழியவேண்டும்
எம் மூத்தபெற்றோரின் ௨ழைப்பு
ஈழம்
குடியேறிய கூட்டம் எம்மை வீழ்ந்த
கூடியே நாம் வாழாமையே வீழ்ச்சியின்
சூழ்ச்சி
நன்றி
