புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-27

09-05-2024

அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே

அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப் புரிய வைப்பா!

உலையில் அரிசி போட்டா
உறவுக்காரர் வரலாமென
ஒரு புடியும் போட்டு வைப்பா
பசிகொஞ்சம் வாட்டினாலும்
உண்ணாமல், உறங்காமல்
என் வரவை எதிர் பார்த்தும் இருப்பா!

கொஞ்சம் பிஸியென்றால்
சின்ன முணுமுணுப்பு
சீமாட்டியை காணோமென
என்ன வேலையோ என கணகணப்பு
பக்கத்தில் நானிருந்தால்
பளிச்சென்ற முகயொலிப்பு!

அன்பின் பொக்கிஷமும்
அரவணைப்பின் தெய்வமும்
அர்பணிப்பின் வள்ளலும்
தியாகத்தின் மெழுகுவர்த்தியும்
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே!

உலக அன்னையருக்கும்,
தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan