கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியில்

அன்னைக்கு நிகருண்டோ அவனியில்.
அம்மா..!
அம்மாவின் கருவறையில்
நாங்கள் தெய்வம்
ஆலயத்தின் கருவறையில்
அம்மா தெய்வம்

உயிரோடு உடல் தந்தாள்
உலாவ விட்டாள்-தமிழ்
உணர்வோடு உணவு தந்தாள்
உயர வைத்தாள்.

இருள் வந்து சூழும் போது
நிலவாய் நின்றாள்
எமை வளர்த்து மரமாக்க
வேராய்ச் சென்றாள்

உறக்கமின்றி எம்மவர்க்கு
உயர்வைத் தந்தாள்
உழைத்துழைத்து- உலகத்தில்
ஓடாய்த் தேய்ந்தாள்

தனைமறந்து எமக்காக
வாழ்ந்த தாயை-அவள்
தந்த உயிர் பிரியுமட்டும்
நிறுத்தி வாழ்வோம்.
அம்மாதான் நேரில் கண்ட
அன்புத்தெய்வம்
அதைவிடவும் ஆலயங்கள்
தேவையுண்டோ..

-பசுவூர்க்கோபி-
நெதர்லாந்து.

Nada Mohan
Author: Nada Mohan