அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக. 04.01.2022
தலைப்பு !
இலக்கு
இலக்கை தொட்டிட
இறக்கைகட்டி பறந்திடுவேன்

இலட்சியம் அடையும்வரை
இரவும்பகலும் உழைத்திருப்பேன்

குறிக்கோளை எட்டிட
குறுகிகூணி நின்றிருப்பேன்

கருவிழிக்குள் கனவுவைத்து
கண்ணாக பார்த்திருப்பேன்

இதயத்தில் ஏக்கம்வைத்து
இரும்புகூடாய் காத்திருப்பேன்

தடகைகளை தகத்தெறிந்து
தவப்புதல்வனுக்கு கல்விதருவேன்

மருத்துவர் கனவோடு
மகத்துவம் பெறச்செய்வேன்

வைத்தியபணி சிறக்க
வைத்தியர் ஆக்கிடுவேன்

உழைக்கும் மகனுக்கு
உறுதுணையாய் இருந்திடுவேன்

மனதில்ஓர் இலக்கு
மகனை மதியாலே நீநிரப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading