மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

அப்பாவின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி 108

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026

தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் வெள்ளமாய் பாசமும்
உலா வருவீர்கள் எம்முடன் நேசமாய்..

சொல்ல வார்த்தையில்லா பேரொளிப் பிழம்பே
சோதியாய் ஒளிரும் சுடரும் தானே அப்பா..
தருணமறிந்து தர்க்கம் விலக்கி
அருளும் அறிவும் நிறைந்த ஆளுமையும்

அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை
கண்ணுக்குள் இன்னும் தெரியுதப்பா..
கலங்கி நாமும் தவிக்கின்றோம் தந்தையரே
கண்மணியாய் எமைக்காத்த தாயுமானவரே…

ஆண்டு எட்டு ஓடி மறைந்தாலும்
ஆறாது எம் துயரம் அப்பா…
மீண்டு வராதோ உங்கள் பாசமென
மீளாத் துயரில் தவிக்கின்றோம் அப்பா…

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading