இராசையா கௌரிபாலா

தைமகளை வாழ்த்துவோம்
————————————-
தைத்திருநாள் வந்ததே தைமகள் முற்றத்தில்
எத்திக்கும் கொண்டாட்டம் ஏர்முனையில்-புத்துணர்ச்சி
தித்திப்பு பொங்கியே தேனாய் இனித்திடும்
முத்தமிழ்ப் பண்பாட்டின் மூச்சு.

திருநாளாம் இன்று தரணியிலே பொன்னாள்
திருமலர்ந்த இன்பத் தினமாம்-தருவாய்
விரும்பி உழவர் விதைத்தே அறுத்த
பெருவாரி நெல்மணி பெற்று.

போற்றிடும் நாளே பொழுதினில் சூரியனை
சேற்றினில் கால்வைத்த சேவையர்- சோற்றினைப்
பேற்றுடன் தந்தாரே போரினை வைத்துமே
ஆற்றுகை காண்பர் அறம்.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading