இரா.விஜயகௌரி. வைகாசித்திங்களில். வைகறை இருட்டாச்சே

இரா.விஜயகௌரி

தமிழினத்தின். வரலாற்றில்
நீண்ட துயர் சுமந்த திங்களிது
உயிர்காக்க உறவு சுமக்க
பதறித்துடித்து பதைபதைத்த பொழுதுகள்

விடியாத இரவுகளை விடி வெள்ளி எழுதியது
எழுதாத சோகத்தில் தத்தளித்த மணித்துளிகள்
குண்டும் குழியும் வெடியும் ரணமுமாய்
குருதி பொழிந்த தேசத்தின் சுவடுகள்

நிராதரவாய்நிதர்சனத்தை தரிசித்து
நிர்மூலமாகிப் போன நடைப்பிணங்பளாய்அவர்கள்
ஏதிலிகளாய் நாதியற்று நடுத்தெருவில்
கேட்பாரற்றுப்போன வெடிகுண்டுச் சிதறல்கள்

ஆம் முள்ளி வாய்க்கால் வரைந்தெழுதிய
முரணான தேசத்தின். ரணத்தின் பெருவலி
துயரை இன்றும் சுமந்துகாணாமல் தேடும்
உறவிழந்த உயிர்களின் பெருவலி

ஆம் வைகாசித் திங்களின் வைகறை
இருட்டின் பெருங்கரத்துள்பெருந்துயரானது
அவலத்தின் பெருங்கதை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading