கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

இரா விஜயகௌரி

அதனிலும் அரிது

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
அதனினும் அரிது நோயின்றி வாழ்தலரிது
உடல்நலம் பேணுதல் அரிது
தினம் நெறிபட வாழ்தலுமரிது

வாழ்கின்ற கணங்களெலாம்- நாம்
உண்ணும் வகை நெறியாக்கி
உடற் பயிற்சி மன அயர்ச்சி- நிதம்
போக்கி வாழ்வமைத்தல் பெரும் செல்வம்

சேர்த்தபணம் வழிந்தொழுக – எத்
தொந்தி நிறை நோய். பெருகின்
மாத்திரைக்குள் உயிர் சுமக்கும்
பெருவலியால் நம் மனம் கனக்கும்

செல்வத்துள் பெருஞ்செல்வம்
நோயற்ற பெரு வாழ்வு உணர்வதில்லை
உணர்ந்த கணம் சூரியன் நிலைப்பதுண்டோ
மறைந்த பின்னே வணங்கிப்பயனென்ன

அதனால் உயிர் மூச்சின் உடல் நலத்தின்
பெரும் பயனை வாழ்ந்தவர்கள் வழிமொழிய
தலைமுறைக்கு. பெரும் சொத்தாய்
எழுதி வைப்போம். தொடர்ந்து வெல்வோம்

Nada Mohan
Author: Nada Mohan