அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

இரா. விஜயகௌரி

விடைதரவா செல்வமே……..

கொதித்துப் பிளந்து
கோபக்கடலில். வெடித்துச் சிதறி
வேகச் சரிவினில். நொருங்கி
சரிந்த சுவர்களின். நடுவே அவள்

பிழந்த பூமியின் இடுக்குகளிடையே
மென்தளிர் மகளாள் கசங்கிக் கிடக்கிறாள்
துருக்கியின் செல்வம் துவண்டது
துடிப்பை. அடக்கி நின்றனள்

அவள் கரங்களின் பிடியை விடாது
விட்டுப் பிரிந்திட முடியா. தந்தை
அனலின் நடுவில் அமர்ந்த சோகம்
அணைத்திட முடியா பாசத் தவிப்பு

இன்னமும் நான் மட்டுமேன்
உயிர்க்கூடு சுமக்கிறேன்
கேள்விகள் துளைக்க 2023
மாசித்திங்கள் 6இன் பதிவெழுதும்
சுவடாய் இவர்கள்

கனக்கிறது இதயம்
கசிகிறது. விழிகள்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading