உடன்பிறப்புக்கள்

ரஜனி அன்ரன் (B.A) “ உடன்பிறப்புக்கள் “ 10.04.2025

ஒருதாயின் உதரத்தில் உதித்த
உதிரத்தின் உறவுகள் உடன்பிறப்புக்கள்
உறவைக் கொண்டாடி மகிழ
உறவினைப் பலப்படுத்தவென
உருவானதே ஏப்ரல்பத்து
உடன்பிறப்புக்கள் தினமாக !

அக்கா அண்ணா தங்கையென அறுவராகி
ஒருகூட்டுப் பறவைகளாய் சிறகடித்து
ஒன்றாகக்கூடி மகிழ்ந்தகாலம்
கிளைகள் தாங்கிய வேராக
பாசநிழலில் வாழ்ந்தகாலம்
பகிர்ந்து உண்டகாலம்
பசுமையாக இனிக்கிறதே இன்றும் !

அப்பப்போ செல்லச்சண்டைகள் சிணுங்கல்கள்
சண்டையிலும் பாசம் முகிழ்க்கும்
சிரிப்பிலும் சிங்காரமிருக்கும்
புதையலாய் நினைவுகளும் பூக்கும்
பூக்களாய் பாசம்விரியும்
கூடுவிட்டு கூடுகலைந்து நாடுவிட்டு நாடுவந்து
வாழ்ந்தாலும் தொடர்கிறது பாசவலை
உடன்பிறப்புக்கள் எம்முயிரானவர்
உன்னததினத்தை உரமாக்குவோம் !

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading