சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உயிரான உயிரே

உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை

நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்

ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய்

என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா

முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது

இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே

அன்பாலே என்னை அரவணைத்த காதலனே

இன்னொரு பிறவியிலும் நீதான் கணவன்

மதிப்பும் மாண்பும் மலர்ந்த முகமும்

மதியின் ஒளியாய் வீசும் அழகும்

விதியே உன்னை வாழ்த்தியே நிற்பேன்

கருணையும் நிறைந்தவரை காலமெல்லாம் வாழவைப்பாய்

சிவரூபன் சர்வேஸ்வரி

Author: