உயிரான உறவு…..

இரா.விஜயகௌரி
வைகறைகள் உயிர்ப்பெழுதும்
வனப்பு மிக்க விடியலுக்கு
தினமெழுதும் மொழிப்புனலாய்
கனவெழுதும் தேவதை இவள்

தன்வலியை தான் மறப்பாள்
உதிரத்துள் உறவு சொல்வாள்
கானகத்து பயிர் செழிக்க
கண் இமைக்குள் பூட்டி வைப்பாள்

வித்தகத்தை தினம் நிறைப்பாள்
விளைபயிரை செழிக்க வைப்பாள்
பண்பினையே தன் வாழ்வாய்- நாம்
பழகியெழ உணர்விடுவாள்

சிந்தனைக்குள் செப்பி எழும்
வேதமிவள் வார்த்தை இழை
அன்னையிவள் அகத்தினுள்ளே
விதைத்து எழுத் வியப்பின்மொழி

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading