கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

-எல்லாளன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு 116 “நீர்குமிழி. என்னுடைய திருமண நாள்
என்ற எண்ணம்
என்னுள் எழும் வேளை எலாம்
என்னுள் மின்னும்
துன்பியலாம் நிகழ் வொன்று
தொலையாதென்றும்
சொர்க்கமொடு நரகமென்றும்
விதி ஈதென்றும்
முன்னயவர் மொழிவு எல்லாம்
உண்மை என்ற
முடிவை இது முன்மொழியும்
நிகழ்வு என்பேன்
தம் இனிய திருமணத்தை
எமது நாளில்
தான் பதிந்த மணவாளன்
பிணமாய் போனான்.
**
மண்டபமும் மணவறையும்
காத்திருக்க
மறையோதும் வேதியர்கள்
கண்ணும் பூக்க
கொண்டு வந்தார் உறவினர் அக்
கொடிய சேதி
கொலையுண்டான் விபத்தில்
மண வாளன் என்று
கண்ணிரண்டில் கனவு மின்ன
காத் திருந்த
கன்னியவள் மனம் அதிர
மயங்கி போனாள்
பண்ணிவிட்ட பாவ வினை
பயன் இதாமோ
பாவி அவள் கனவுகள்
நீர் குமிழி தானோ.

**மணப்பொருத்தம் சாதகத்தில்
நூறு வீதம்
மாப்பிள்ளை சீதனமும்
வட்டி தேட்டம்
அணங்கவளும் மனம் ஒட்டி
எழுத்தின் பின்னர்
அவளோடு ஊர் சுற்றி
கண்டாள் சொர்க்கம்
கணம் ஒன்றில் விபத்தாலே
காலன் கையில்
கை பிடிக்க காத்திருந்தாள்
கதியை எண்ணில்
பணம் கொண்டு வாங்குகிற
பண்டம் அல்ல
பாரிதிலே உயிர்களது
பலன்கள் யாவும்
கணநாதன் கர்ம விதி
பயனுக்கேற்ப
கணக்கெழுதி வைத்தபடி
நடக்கும் என்பேன்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading