வாழ்க்கையின் அர்த்தம்

வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு நாளும் பிறப்பு
கனவுகள் தாங்கியே ஓட்டம்

விழுந்து எழுந்து படித்த பாடம்
வலியை தாங்கும் பலமும் சேரும்
சிரிப்புக்கு பின்னால் மறைத்திருக்கும் கண்ணீர்
புதிய நம்பிக்கையின் வேருக்கது தண்ணீர்

வாழ்க்கையின் அர்த்தம் வெறுமனே உயிர் வாழ்வதா
இதயங்களை உடைக்காமல் இதயங்களில் கூட்டியேறுவது
இறுதியில் எடுத்துச் செல்வது எதுவுமில்லை
ஆனால் ஆயுள்முழுவதும் நினைக்கும்படி அன்பை விட்டுச்செல்லலாம்

ஜெயம்
28-05-2026

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading