06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
ஒளவை
சுயம்
******
இறைவன் படைப்பில்
இயங்கும் உயிரில்
மறைவாய் ஒன்று
மிதமாய் இருக்கும்
குறைகள் பலதைக்
கொண்டால் கூட
நிறைவாய் ஏதோ
நிமிர்ந்து நிற்கும்
நிலவும் வானும்
நீரும் மண்ணும்
பலத்தில் தம்மைப்
பிறதாய் எண்ணா
தமக்குள் இருக்கும்
சுயத்தைக் கொண்டு
எமக்கு இன்பம்
என்றும் தருமே
மனிதன் மட்டும்
மனத்தின் குணத்தால்
தனித்த பண்பின்
தரத்தை மறந்து
நினைத்த உடனே
நிறத்தை மாற்றி
அனைத்தாய் மாற
ஆசை கொள்வான்
உனக்குள் இருக்கும்
உண்மை அறிந்து
மனத்தை மாற்றும்
முயற்சி மறந்து
இனத்தின் சுயத்தை
இருப்பாய்க் கொண்டால்
கனதி அற்றுக்
காலம் கடப்பாய்.
ஒளவை.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...