16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஒளவை
இயற்கை
———————
இறைவன் படைத்த
இனிய சொத்தே
குறைகள் இல்லாக்
கொடையே எமக்கு
கறைகள் தந்து
கர்வம் கொண்டோம்
மறைவாய் எம்மை
மரணம் தொடருதே
பிரபஞ்ச சக்தி
பரந்த பூமியில்
சிரமங்கள் இன்றி
சிறப்பாக வாழ்ந்திட
வரமாகக் கிடைத்த
வளமே இயற்கை
பரமனும் தந்தான்
பகுத்தறிய மறந்தோம்
இயந்திர மயத்தில்
இயற்கையை அழித்தோம்
இயல்பை மாற்றி
இன்பத்தைத் தேடினோம்
செயற்கை வழியில்
செயல்கள் புரிந்தோம்
இயல்பு வாழ்வின்
இனிமை இழந்தோம்
வேற்றுக் கிரகத்தில்
வாழ்ந்திட ஆசையில்
காற்றில் கூடக்
கலந்தோம் நச்சு
மாற்றமோ எங்கும்
மனிதன் செயலால்
ஈற்றில் நாமே
தோற்றுப் போகிறோம்.
ஔவை.

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...