19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
ஒளவை
மொழி
=======
அழகிய மொழியே
அமுதினும் இனிதே
பழகிடப் பண்பே
பருகினால் கடலே
வழங்கினாய் கொடைகள்
வருங்காலம் புகழே
உழல்கின்றோம் உன்னில்
உயிராக என்றும்
தொன்மையில் முதலாய்த்
தோன்றினாய் உலகில்
தன்மையில் நீயோர்
தனித்துவம் ஆனாய்
அன்பினால் மனதை
ஆழ்கின்றாய் தாயாய்
உன்னுடன் வாழ
உயர்வினைத் தருவாய்
இலக்கண நூல்கள்
இயம்பினாய் வலுவாய்
இலக்கியம் பலதால்
இவ்வுலகை வென்றாய்
பலகோடி நூல்கள்
பாரிற்குத் தந்தாய்
பலபேரும் வியந்து
பார்க்கின்றார் உன்னை
வங்கத்தில் தோன்றி
வழிபல கொண்டாய்
சங்கங்கள் வளர்த்துச்
சரித்திரம் கண்டாய்
அங்கங்கள் பலதில்
அழகினில் மிளிர்ந்தாய்
எங்கினும் உண்டோ
எம்மொழி போல.
ஒளவை.

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...