கமலா ஜெயபாலன்

தைமகளை வாழ்த்துவோம்
—————————————
வருவாய் தழிழ்மகளே வண்ணச் சிறப்பாய்
தருவாய் நலன்பல தந்து-கருவாகும்
நெல்மணிகள் ஓங்கியே நானிலமும் பொங்கிட
நல்கிடுவாய் நற்சீர் நமக்கு

ஏர்பிடித்தார் தந்தை எழுத்தும் அறிவித்தார்
பார்போற்றப் பக்குவமாய் படிப்பித்தார் -ஏர்பூட்டி
ஏழ்மை தெரியாமல் ஏற்ற உழவனாய்
வாழ்வை வளமாக்கியும் வாழ்ந்து

பொங்கலும் பொங்க பகலவன் தோன்றிடவும்
சங்கும் முழங்கி சொந்தங்கள்-பங்கேற்கும்
சுவையான நாட்களும் சுதந்திரமாய் வந்தால்
இவையனத்தும் இன்பமாகும் என்று

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading