கமலா ஜெயபாலன்

வசந்தமே வா வா
——/////——-/////
வண்டும் வலம்வர வண்ணமலர் மணம்வீச
கண்டும் களிக்கும் கனகாம்பரப் பூமலர
சிட்டுக் குருவி சில்லென்று பறந்துவர
வட்டமிட்டு தேனீயும் வாயூதி ரீங்காரமிடும்

முள்ளி வாய்க்கால் கள்ளியும் பூப்பூத்து
அள்ளி மடிந்த அனைவருக்கும் ஆசிகூறும்
எரிந்த நிலமும் எளிலாய் உயிர்பெற
பரிந்து நாமும் பகிர்வோம் அஞ்சலி

மரங்கள் துளிர்விட மான்குட்டி துள்ளியோட
தரமான காய்கறியும் தாழ்வாரத்தில் தான்வளர
ஆடைகள் சுருக்கி ஆங்காங்கே ஆணும்பெண்ணும்
வாடைக் காற்று வாங்க வருங்காட்சியும்

வசந்தம் வந்தால் வரும்எமக்கு விடிவு
விசமான காலம் விடிவும் விரைவில்
மலர்கள் இதழ்விரித்து மலர மணமும்
பலர்வாழ்வில் வீசும் பாரினில் பாரீர்

வருக வசந்தமே வனப்பான வாழ்வைத்
தருக எமக்கு தாரணி சிறக்க
எட்டுத் திக்கும் ஏங்கி வாழும்எம்மினம்
பட்டதுபோதும் பறவைக் கூட்டமாய் ஒன்றாவோம்

வண்ண மலர்கள் வடிவைத் தர
கண்ணைப் பறிக்கும் கதிரவன் ஒளியும்
கப்பல் ஓடும் கடற்கரைக் காட்சியும்
எப்போதும் எமக்கு ஏற்றது வசந்தமே
வசந்தமே வா வா
சாந்தமே தா தா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading