கமலா ஜெயபாலன்

எண்ணம்
இனிக்கும் நினைவுகள் எண்ணத்தில் ஓடும்
கனிந்து மனதில் கரைந்து பாயும்

தந்தையும் தாயும் தந்த பாசமும்
எந்தை நாடும் எழிலான காட்சிகளும்

அண்ணன் அக்கா அனைத்த உறவும்
கண்ணில் நீராகி கவலைக்குள் தள்ளும்

மண்ணில் வீடுகட்டி மகிந்த காலங்கள்
எண்ணத்தில் இருத்தி இழந்தவை போக

இருப்பவை எண்ணி இதயம் நிறைந்து
வருபவை எல்லாம் வளமாய் குவிய

நல்ல மனிதராய் நானிலம் போற்ற
இல்லை என்று எதுவும் வேண்டாம்

இதுவே போதும் இறைவன் தந்தது
அதுவே விதியென ஆறுதல் அடைவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading