நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கல்லறைகள் திறக்கும்

ராணி சம்பந்தர்

கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப் பூமிக்கு வருந்தியே
பாடடுபட்டுப் போரிட்டதே

பீறிட்ட வல்லூறில் சிக்கிச்
சின்னாபின்னமாகப்பட்டு
தவியாய்த் தவித்த உயிர்
நீத்ததில் சொல்லணாத்
துயரிட்டது

வேரிட்ட கல்லறைகளே
காணாமல் போனதிலே
புல்லறைகள் ஆகிப் புல்,
பூண்டுகள் பூத்திட்டதே

துயிலும் மாவீரருக்கு வீரத்
தாயார் தூவிய பூக்களின்
தாகமதில் பிறக்கும் காவிய
ஓவியமதில் பயின்றதில்
புடைத்த புயங்கள் மூடியை
உடைத்துத் திடீரெனவே
கல்லறைகள் திறக்கும் .

Author: