நேர் நின்று பேசு..!!

வியாழன் கவி 2379!!

நேர் நின்று பேசு..

வீசும் வாள் போல் விழி
என்றுனை பாடினாரோ
நேசம் கொண்ட பெண்மை
புகழ்ந்தே உரைத்தாரோ
நீதி நெறி காக்கும் வீர
மகளே என்றுரைத்தாரோ
நேர் விழி காட்டு பெண்ணே..

தூய்மை உள்ளம் உனக்குள்
துணிவு நெஞ்சம் மொழிக்குள்
பேசும் வார்த்தை பூமணம்
இன்னும் உயர்வு சூடிட வா வா
காயம் தந்த கயமை முன்னே
காரணம் உரைக்க தேவையென்ன
நெடிய வானம் உனக்கே துணை..
சிவதர்சனி இரா
26/8/2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading