தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா

காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம் உன்னிடம் பணிந்தேன்
வித்தைகள் கோடியே விளம்பிடும் வண்ணமே
முத்துக்கள் பரப்பியே மூவுலகும் ஆளுமே
சித்துக்கள் இல்லையே சிந்தையே வசமாக்கி
பற்றுடன் மிளிரும் நிலையே
நற்றமிழ் நவின்றிட நாதமும் ஓங்கிட
கற்றவர் சிறந்திட காற்றாய் வீசிடவும்
உறவாய் ஊற்றாகவே ஊறும்
பொற்புடன் துலங்கும் சான்றே ஏற்றிடு ஏகமனதாய்க் கொண்டு பேராதரவு காட்டியே
வீற்றுமே வருவாள் வீணையுடன் வாணியும்
சாற்றிடு மலர்கள் அவளுக்கே
-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading