கார்த்திகை மாதம்

ராணி சம்பந்தர்

கார்த்திகை மாதம்
காவல் காத்திருந்து
பாரினில் வருடந்தோறும்
உருண்ருண்டு வந்திடுமே

அணையாத துயிலிலே
அரவணைக்கும் தேகம்
பிணைக்கும் உற்சாகம்
பொங்கி திரண்டிடுமே

கருமேகப் போர்வையில்
போர்த்த இருளில் மூழ்கி
முகிலோடு பிரண்டிடுமே

காந்தள் பூக்கள் பல மலர
காவிய நாயகியாய் வலமிட
கதைகள் சில திரண்டிடுமே

மனதிற்கும் மாளிகைக்குமே
இன்ப ஒளி கனிவாய் சுரந்து
துன்பம் உருண்டோடிடுமே

வாழ்விழந்து போனாலுமே
வலுவிழந்து ஆனாலுமே
பலமிழந்து போகாது ஆளும்
பதியோடு உறைந்திடுமே .

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading