மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பெற்றோர்! சந்தம் சிந்தும் சந்திப்பு!
கருவாக்கி உருவாக்கி
உயர்வாக்கி வைக்க
வரமாகப் பெற்ற
வாஞ்சையாம் உறவு!
மருவாகப் பிறந்தாலும்
மகவாகக் காத்தே
திருவாகப் போற்றிடும்
தெய்வங்கள் பெற்றோர்!

அல்லவை நீக்கி
வல்லவர் ஆக
அல்லும் பகலுமாய்
அனுதினம் கரைப்பது
அவர்தம் உதிரம்!
சொல்லுக்குள் அடங்காச்
சுந்தரம் இவராய்
சொரிந்துமே நிற்பது
நிரந்தர நேசம்!

முகமது சான்றாய்
முகவரி ஆவார்
முழுமதி ஆக்கிட
முழுவாயுள் தருவார்
தகைமகள் கண்டே
தாங்குவார் மகுடம்
தரணியின் இவரின்றித்
தொடருமோ ஆயுள்?

வறுமையை ஒறுத்து
வளங்களைத் தந்தோர்
பெறுமதி புரிந்தே
போற்றிடல் கடனாம்
நறுமுகை என்றே
நாட்டிடல் பேறாம்
இறுதியில் அதுவே
இசைவுறும் நமதாய்!

கீத்தா பரமானந்தன்15-05-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading