மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

தீபாவளி!

இல்லமும் உள்ளமும்
இன்பத்தில் மலர்ந்திருக்க
அல்லவை போக்கியுமே
ஆவளியாய்த் தீபமேற்றி
நல்லோர்கள் காட்டிய
நன்நாளாம் தீபாவளி!

மத்தாப்புச் சிதறலாய்
மகிழ்வது அணைத்திருக்க
புத்தாடை பட்சணங்கள்
போகமாய் நிறைந்திருக்க
கொத்தாக உறவுகூடி
கொண்டாட்டம் போடும்
வித்தார விழாவாய்
விருந்திடும் தீபாவளி!

தீபத்தின் ஒளியில்
தீமைகள் பொசுங்கிடும்
போர்மேகம் விலகி
பொழியட்டும் ஆனந்தம்!
பாரெங்கும் அமைதி
பரவசத்தை நிறைத்திடவே
ஊர்கூடிக் கொண்டாடுவோம்
உவப்பான தீபாவளி!

கீத்தா பரமானந்தன்
06-11-23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading