மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நிர்மூலம்!சந்தம் சிந்தும் சந்திப்பு
பெண்மூலம் நிர்மூலம்
பேச்சொலிகள் கேட்டுக் கேட்டே
வண்ணக் கனவுகளை
வலிகளுக்குள் புதைதிட்ட
எண்ணற்ற கன்னியரின்
இதயத்தின் குமுறல்கள்
இளமையின் ஏக்கங்கள்
மூடத்தனத்தின் முடிவிலியாய்
முடிகிறதே நிர்மூலமாய்!

அன்றுதொட்டு இன்றுவரை
உச்சத்தில் வாழ்வதற்காய்ப்
பச்சோந்திக் கூட்டத்தின்
காட்டிக் கொடுப்பாலே
தன்மானம் கொண்டெழுந்த
தன்னிகரில்லா வேங்கைகளின்
பொன்னான ஆயுளெல்லாம்
போனதுவே நிர்மூலமாய்!

வெளிநாட்டு வாசமில்லை
விநயமாய் இரந்ததில்லை
கண்ணியதின் நிமிர்வுடனே
களிகொண்டு வாழ்ந்திருந்த
எளிலான சோலைகளும்
எடுப்பான மாடங்களும்
கட்டாக் காலிகளின்
கணக்கற்ற பாச்சலினால்
கண்டது நிர்மூலம்!

கீத்தா பரமானந்தன்
20-05-24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading