தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கீத்தா பரமானந்தன்21-04-2023

ஆற்றல்! சந்தம் சிந்தும் சந்திப்பு

ஆற்றல் தானே அகிலத்தின் மூலம்
ஏற்றியே வைக்கும் எப்போதும் சிகரம்
ஊற்றென எழுந்தே உணர்வினை விரட்டி
உயரிய தடங்களை உவப்புடன் நிறுத்தும்!

சுந்தர உலகின் சுகந்தங்கள் யாவும்
தந்தவர் ஆற்றலைத் தமதெனக் கொண்டவர்
எந்திரம் படைத்தார் எழிலையும் சமைத்தார்
எடுத்திடு என்றுமே இன்பங்கள் சொரிந்தார்!

சிந்தையின் ஆற்றல் சிறகைனை விரிக்கச்
சிந்திடும் தேனாய்ச் சீரிய வழிகள்
மந்திரம் இதுவாய் மனத்தினிற் கொள்ள
மலர்ந்திடும் ஆயுள் மகத்துவம் சூட்டும்

தோற்றுவாய் நமக்குள் தொட்டுமே எழுவோம்
நாற்றெனப் பதிந்தே நயங்களை விதைப்போம்!
ஆற்றலின் வழியே ஆக்கியே கவியைச்
சாற்றியே நிற்பேன் சந்தத்தின் சிந்தில்!

கீத்தா பரமானந்தன்
21-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading