முன்னூறாய் முகிழ்ப்பு

வசந்தா ஜெகதீசன் முன்னூறாய் முகிழ்ப்பு.. திறமையின் தேடல் திசையெங்கும் விரவும் தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும் சமூகத்தின் சாளரம்...

Continue reading

குவலயமும் குளிர்ந்திடுமே

சர்வேஸ்வரி சிவருபன்

குவலயமும் குளிர்ந்திடுமே

தாவிவரும் முகில் கூட்டமேபாவி நிற்க மாட்டாயா
தூவிவிடும் மழைநீரை சேர்த்தனுப்ப மாட்டாயா
ஆவியாகப் பறக்கின்றதே அவனி
சாமிகூடப் பார்த்திருக்கார் பாரு
காமிநீயும் மழைத்துளியை மண்ணில்
சோம்பி மக்கள் கூம்பினர்
சோகம் கொண்டே வீழ்ந்தனர்
சாபம் போட்ட நிலையாகி
சாதிக்கின்றான் கதிரவன் சதிராடி
மாதமும் உச்சம் கொண்டது
நேரமும் நன்றாக அமைந்தது
கூறும் கூற்றை செவிசாய்ப்பாய்
காணும் உந்தன் விளையாட்டு

அமுதம் சிந்தும் நிலையாகி
அமுதமழையைப் பொழிவாயே
குமுதமாக வருவாய் என்றால்
குவலயமும் குளிர்ந்திடுமே
சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading