கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
காணி
———
காணி நிலம் வேண்டும்
அங்கு ஒரு பெரிய வீடும். வேண்டும்
என்னே பெரிய ஆசை
பாரதியின் கனவு ஆசை
பாமர மக்களுக்கும உண்டே
காணி சொத்து பரம்பரையாய்
வந்து சேரும்
சொத்து இல்லாதோர்
ஏங்குவர். ஒரு காணித் துண்டு
வாங்குவதற்கு
எங்கள் தந்தையும் ஒரு காணி வாங்கினார்
அங்கு ஒரு வீடு கட்டினார்
சொந்த உழைப்பில் கட்டினார்
ஆறுபிள்ளைகள் அழகிய குடும்பம்
அந்த வீட்டில் நிம்மதியாக
வாழ்ந்தார்
இன்று அவர் இல்லை
அவர் காணியில் அவர் சந்ததி
வாழும் நிலையில
காணி யை விற்காது
வைத்திருப்பார்களா
என்ற கேள்வியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading