கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

நிலைமாறும் பசுமை

நிலையான பூமியில்
நிஜம் தேடும் உயிரினங்கள்.
தொல்காப்பியம் கூறியது
முதலாம் அறிவு மரம்.
தொடுதல் உணர்வுடையவை
அதுவே அவற்றை தொட்டு
பேசினால் வளர்ச்சி அடையும் என்ப.
மரம் செடி கொடிகள் தாவரம்
உரம் போட்டால் உய்யும்.
பறவைகள் பழத்தை உண்டு
விதையை பல இடத்தில்போடும்.
அங்கே முளைக்கும் மரங்கள்
அவை பலனை எதிர்பாராது.
தோட்டம் செய்பவன் வீட்டில்
வாட்டம் இல்லை உணவிற்கு
விவசாயி கஷ்டப்பட்டு பயிர்செய்து
மற்றவர்க்கு உணவு கொடுப்பான்.
தன் பசி மறப்பான்.
முன்னோர் ஆரோக்கியாமான உணவு
ஆரோக்கியமான வாழ்க்கை.
தாவரங்களும் ஆரோக்கியமானது
இயற்கை உரமென்பதால்.
இன்றைய உரமோ கெமிக்கல் கூடியது
மனிதரின் ஆரோக்கியத்தில் சீர்கேடு.
மரமோ தாவரங்களோ ஆரோக்கியமெனில்
மனிதனும் அரோக்கியமாக வாழலாம்.
விஞ்ஞானம் விரிவடைந்த காலம்
அஞ்ஞானம் அருகி அழிவுப்பாதையில்
நிலை மாறும் பசுமை நிலத்திலே
அலை இல்லாக் கடலும் அங்கே
விலை மதிப்பற்ற காற்றும் எங்கே
நிலை மாறி மனிதரும் போவதெங்கே.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan