அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

அறிவின் விருட்சம்

ஜெயம் தங்கராஜா அறிவுக்கு இதுவொரு விருந்து அறியாமையை நீக்கிடும் அருமருந்து புத்தியை எட்டவைக்கும் பெட்டகம் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம் வாசித்தால்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

தமிழால் எழுவோம்
————-
தரணியெங்கும் தமிழே பேச்சு
தலையெடுக்க வழியுமாச்சு
தமிழர்களின் வாழ்வில்
முக்கியம் ஆச்சு
உலகத் தமிழர் உன்னதம்
காணுமே செம்மொழியாம் தமிழ்மொழியை
உலகெலாம் உலாவரும்
தேன்தமிழ் செந்தமிழ்
அடுத்த தலைமுறை ஆவலுடன்
அவனியில் கற்கும் தமிழ்
அடுத்தவரும் அதன்பண்பை
மதிக்கும் தமிழ்
எழில்மிகு சுவைத்தும்ப
எல்லோரும் போற்றும் தமிழ்
எங்களுக்கு பெருமைகள்
பல தந்த தமிழ்
கற்றவர் நடுவே காவியத் தமிழ்
கனிந்துவரும் சொற்றமிழ்
பெற்றவர் அதன் பேறை ப் பேணிக்காக்கும் பெருமைத்தமிழ்
உற்றவர் உறவினர்
உரையாட ஓங்குதமிழ்
நற்றவர் நானிலத்தில்
நடைபயிலும் அன்னைத் தமிழ்
இத்தனை பெருமை கொண்ட
இன்பத் தமிழால் எழுவோம்!

Nada Mohan
Author: Nada Mohan