கோசலா ஞானம

சந்தம் சிந்தும் சந்திப்பு
அலைஓசை

அலைஓசை வந்து அடிக்கின்ற சத்தம்
நிலைகுலைய வைத்து நின்மதி கெடுக்கும்
மலைபோல உயரமாய் முட்டி மோதியே
தலையை நனைத்திடும் தண்ணீரின் பாய்ச்சல்

அலைஓசைச் சத்தம் அதிர வைக்கும்
சிலையாய் நின்று சிந்திக்கத் தூண்டும்
சுழட்டிச் சென்ற சுனாமியின் நினைப்பு

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan