சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

கோடை 30.06.2026

செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின் வேகம்

கோயில் திருவிழா
பிறந்தநாள் திருமணம்
விடுமுறை காலம்
கொண்டாட்டம் பலதும்
வந்திடும் நேரம்
கோலோச்சம் போன்று
அடுக்காய் சேர்ந்திடும்

குளம்குட்டை கால்வாய்
ஆறு மானிடர் கூட்டம்
குடி கூத்து சத்தம்
பகல் இரவு ஆட்டம்

பகலவனின் அனலும்
சுட்டெரிக்கும் வாரம்
பகல் இரவு உணவிலே
குறைக்கனும் காரம்

கோடை வந்தாலே
மழையும் மறைவு
கொழுத்தும்வெயிலும்
சொற்பமாய் நிறைவு

செல்வி நித்தியானந்தன்

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading