க.குமரன் 27.4.23

வியாழன் கவி
ஆக்கம் 111

வளர்ந்த குழந்தைகள் தாமே!

எழுதிடும் கவிகள்
வலியினைக் தாங்குமா
வரியதின் வழிதனில்
மன வலி போக்குமா ?

சிறகுகள் ஒடித்திட
பறவைகள் பறக்குமா
பறந்திட உதவிட
வார்த்தைகள் போதுமா ?

தாங்கும் இதயங்கள்
சார்பதை தேடுமா?
வருகின்ற நாட்களில்
வழித்துனை தோன்றுமா?

புலர்ந்திடும் பொழுதுகள்
விடிவதைக் காட்டுமா?
கரங்களைக் கூப்பி
கடவுளை நாடி

நலம் வளம் பெற
நம்பிக்கை கொள்வோமா!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading