க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 78

உள்ளம் உவகை பொங்கும்

அலைகடல் தரை தடவ
அலை தடவாது நாம் ஒட
துள்ளும் அலை பேர் கொண்டு
பெரிதாக நமை நனைக்க
உள்ளம் உங்கள் பொங்கும்

மனம் பரப்பும் மகிழம்பூ
பூ மஞ்சம் தரை பரப்ப
மகிழ்ந்து வாரி யதைத் தொடுத்து
மங்கையவள் தலையை அலங்கரித்தால்
உள்ளம் உவகை பொங்கும்

பல வகை உணவுகள்
பாங்காக சமைத்து பரப்பி
பலர் சேர்ந்து கூடி சிரித்து உண்டால்
உள்ளம் உவகை பொங்கும்

வெள்ளை சிரிப்பு சிறுவர் சிறுமிகள் சிரித்திட்டால்
வேதனைகள் பரந்தோடி
துள்ளும் அந்த மனத்தோடு
துள்ளிக் குதூகலித்து
உள்ளம் உவகை பொங்கும்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading