க.குமரன் 6.12.22

சந்தம் சிந்தும்
வாரம் 203

மார்கழி மல்லிகைபூ இட்டலி

இன்று இரவு
இனிய ஸ்பெசல்
வழிமேல் விழிவைத்து
காத்தி இருப்பேன்
என்றாள்

யூடுப்பில்
ஏலக்காய் சமையல்
பக்கம் பார்த்து
மல்லிகை பூ இட்டலி
செய்து வைத்தால்

தட்டல் இட்டலி
இருந்தது!
மல்லிகை பூ?
ஓ! காணோம்!
அன்போடு தந்ததை
ஆசையோ சாப்பிட்டேன்!

ஆடாத கடைவாய்
பல்லு ஆடுகிறது
அந்த ஏலக்காய்
சமையல் பக்கத்திற்கு
நன்றி!?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading