சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

உள்ளதைச் சொல்லிவிடு – இல்லையேல்
தள்ளியே நின்றுவிடு
நல்லதைச் செய்துவிடு – இல்லையேல்
நயமாய் விலகிவிடு

இன்பத்தை விதைத்துவிடு – இல்லையேல்
இல்லாது சென்றுவிடு
துன்பத்தைத் துடைத்துவிடு – இல்லையேல்
தூரத்தே விலகிவிடு

நேசத்தை வளர்த்துவிடு – இல்லையேல்
நெஞ்சத்தை மறைத்துவிடு
பஞ்சத்தை அழித்துவிடு – இல்லையேல்
பசிப்பையே புசித்துவிடு

அச்சத்தை எரித்துவிடு – இல்லையேல்
ஆயுளை முடித்துவிடு
தாகத்தைத் தணித்துவிடு – இல்லையேல்
தணலாய்த் தகித்துவிடு

மனிதனாய் வாழவிடு – இல்லையேல்
மனிதத்தைத் மறந்துவிடு
மன்னிக்கக் கற்றுக்கொடு – இல்லையேல்
மாண்பினில் தாழ்ந்துவிடு

உண்மையைப் பேசிவிடு – இல்லையேல்
உள்ளத்தை மயக்கிவிடு
கண்டதைச் சொல்லிவிடு – இல்லையேல்
கண்களை இழந்துவிடு

உன்னையே அறிந்துவிடு – இல்லையேல்
உணர்வினில் மூழ்கிவிடு
ஆன்மாவை புரிந்துவிடு – இல்லையேல்
அறிவினைத் துறந்துவிடு

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading