சக்தி சக்திதாசன்

“வேள்வி.
சந்தம் சிந்தும் சந்திப்பு. உள்ளத்தின் உணர்வுகள்
உகுக்கின்ற கேள்விகள்
வெள்ளாமாய்ப் பெருகியே
வேள்வியாய் கிளர்ந்தன

சத்தியத்தின் சாட்சியாய்
நித்தியமும் சோதனைகள்
மொத்தமாய்க் கணக்கிட்டால்
அத்தனையும் சாதனைகள்

சித்தர்களின் கூற்றுப்படி
இத்தரையின் பிறப்புகள்
முத்திரையின் நாடகத்தின்
சித்திரத்துக் காட்சிகளாம்

செல்வமாய் எம்மிடத்தில்
செழித்திடும் அனுபவங்கள்
சொல்லிடும் பாடங்கள்
சேர்ந்திடுமெம் ஆன்மாவை

கற்றவை கற்றபின்னால்
நிற்பது அதற்குத்தகுமாமோ
சொற்சுவை கூட்டியன்று
சொல்லிய வள்ளுவர்

தெரிந்தவை தெரிந்தபின்
புரிந்தவை புரிந்தபின்
அறிந்தவை எச்சமாய்
எரிந்ததெம் சாம்பலில்

உடலினைக் களைந்தபின்
உயிரது பிரிந்தபின்
ஆன்ம உலகினிலே
அடுத்ததோர் பயணமோ ?

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading