மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சக்தி சக்தி தாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 237
“மனந்தான் எல்லாம்”
“என்னைத் தேடி வந்த‌
துன்பமிக்க கணங்களே !
உங்களௌ வெறுக்கவில்லை
பணிவாகத் துதிக்கிறேன்
வாழ்வின் அர்த்தத்தை
வளமாகப் புகட்டிய‌
உன்னத ஆசிரியர்கள்
அல்லவா ?

என்னைத் தேடி வந்த‌
இன்பமிக்க வினாடிகளே !
உங்களை நான் போற்றுகிறேன்
தகுதியில்லா வாசலுக்குள்
தானாக வந்த நீங்கள்
தங்கமான தருணங்கள்
அல்லவா?

என்னை வாட்டிய உறவுகளே
நீங்கள் மீட்டியது கூட‌
ஒருவித ராகமே !
இன்றும் என் மனதில் ஏனோ
ரீங்காரமிட்டுக்
கொண்டிருக்கின்றன‌

என்னைத் தாங்கிய
உள்ளங்களே !
உங்களுக்காக என்
கண்களில் இருந்து
சொட்டுவது அன்புடன்
கலந்த‌ நன்றிமுலாம்
பூசிய ஈரத்துளிகள்
எத்தனை பெரிய சுமையை
இத்தனை சிறிய இதயத்தினுள்
தாங்கிக் கொண்டீர்கள் …….
நீங்கள் மகத்தானவர்கள் !

வார்த்தைகளின் ஓசை
அடங்கி விட்டால்,
அங்கே
மெளனமே மொழியாகிறது.

உள்ளத்தின் உள்ளே
உருளும்
உண்மைகள் கொஞ்சம்
உரசத் தொடங்கினால்,
உதடுகளின் வழியே
உதிர்க்கப்படாத வார்த்தைகள்
மெளனமாய் மனதினுள்
மரணித்துப்
போய்விடுகின்றன.

சொல்லாத சொல்லுக்கு
விலையை நிர்ணயிக்க முயலும்
வியாபாரக் கூட்டத்தின் நடுவே
பாசமும்,பந்தமும்
பயனற்றுப்
போய்விடுகின்றன

அப்போதும்
அங்கு துணை வருவது
மெளனம் தானே ………”
-சக்தி சக்திதாசன்-

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading