புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம் !
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
கடந்து வந்த பாதையில்
*****************************
புலம்பெயர்ந்த நாட்டினில் புதுமைகள் படைக்க
பலம்கொண்ட ஆர்வலர் பணியினைத் தொட்டார்
பக்கத்தே இருந்து பாரியாரும் மகளும்
தக்கதுணை ஆகினர் தமிழ்மொழி வாழ்ந்திட
கண்அயரா எத்தனை கணங்கள் கடந்து
விண் தொடவே எழுந்து வீரியம் கண்ட
ஊடகமது உருளும் உலகில் வலம்வநது
பாடங்கள் பலவும் பாலகர் முதலாய்
பெரியவரும் பெற்றனர் பயன்கள் பலவாய்
காரியங்கள் ஆற்றுகையில் கடந்து வந்த
இன்னல்கள் ஓராயிரம் இடைவிடா முயற்சி
தன்னலமில்லா சேவை தரணியில் புகழுடன்
ஆயிரத்தைத் தொட்டு அதிகமாய்த் தலைப்புகள்
பாயிரங்கள் படைத்து படைப்பில் உயர்ந்த
எழுத்தாளர் எத்தனை ஏராளம் பேர்தானே
விழுதுகளைக் கண்டு வீச்சுடனே இயங்கும்
ஊடகத்தை உரமுடனே உயர்த்திடவே உறவுகளாய்
நாடளவில் பரந்த நல்மனங்கள் வாழ்கவே!
கவிதைநேரத் தொகுப்பாளினிகட்கு நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக!
திரு.நடா மோகன் குடும்பத்தினருக்கு அன்புகலந்த நன்றி கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!
