கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு பழைமை பாட்டானும் தாத்தனும் பழமை முத்துக்கள் பங்கிட்டு பிரித்து தரும் பழுத்த சொத்துக்கள் பழைமை வாழ்வினில் பட்ட துயர் எண்ணி பிழைப்பை நிலைநாட்டி பிழைத்திட துடித்தவர் பழைமை பக்குவப் பட்டறிவு இவரின்றி பாரினில் எவருண்டு பண்பட்ட நிலமன்றோ பழையன கண்டு புதியன நகைப்பதாகுமோ பழுத்த ஓலையாகும் பக்குவநிலை உண்டு பழையன நீக்கி புதியன புகுத்திட பட்டறிவும் படிப்பறிவும் பாழ்பட்டு வீன்படுமோ நன்றி வணக்கம் சகோதரர் பாவைஅண்ணா உங்கள் பணிசிறக்க பணிவான வாழ்த்துக்கள் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு

பழைமை

பாட்டானும் தாத்தனும் பழமை முத்துக்கள் பங்கிட்டு பிரித்து தரும் பழுத்த சொத்துக்கள்

பழைமை வாழ்வினில் பட்ட துயர் எண்ணி
பிழைப்பை நிலைநாட்டி
பிழைத்திட துடித்தவர்

பழைமை பக்குவப் பட்டறிவு இவரின்றி பாரினில் எவருண்டு பண்பட்ட நிலமன்றோ

பழையன கண்டு புதியன நகைப்பதாகுமோ
பழுத்த ஓலையாகும் பக்குவநிலை உண்டு

பழையன நீக்கி
புதியன புகுத்திட பட்டறிவும் படிப்பறிவும் பாழ்பட்டு வீன்படுமோ

நன்றி வணக்கம் சகோதரர் பாவைஅண்ணா உங்கள் பணிசிறக்க பணிவான வாழ்த்துக்கள்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan